சொல்லத் துடிக்குது மனசு – 2
Dec 15th
மதிப்பீடுகள் வீழ்ந்து கிடக்கும் தமிழ் வாழ்வில் மக்கள் எப்படியோ அப்படிதான் அரசியல்வாதிகள்,அதிகாரிகள் இருப்பார்கள்.மீடியாவும் அப்படியே.தமிழகத்தில் தொலைக்காட்சிகள் மக்களுக்கு குப்பையைத்தான் நுகர கொடுத்துக்கொண்டிருக்கின்றன.திரிக்கப்பட்ட செய்திகள்,நடுநிலையற்ற பார்வைகள்,தான்தோன்றித்தனம் இவை எல்லாவற்றின் மொத்தக்கலவையாகத்தான் டிவி சானல்கள் இருந்து வருகின்றன.
விவாதங்கள் முன் முடிவுகளை வைத்தே ஆரம்பிக்கப்படுகின்றன.ஆபாசமான சினிமாப்பாடல்கள், முட்டாள்தனமான சீரியல்கள்,பாசாங்கான ரியாலிட்டி ஷோக்கள்,தொலைக்காட்சியை நடத்தும் கட்சியின் ஊதுகுழலாக செய்தி சானல்கள் இந்த களேபரத்துக்கு மத்தியில் ஒரு சிறு நம்பிக்கையாக ஒரு செய்தி சானல் வந்திருக்கிறது.அது புதிய தலைமுறை.
தெளிவான செய்திகள்,விவாதங்கள் மட்டுமல்லாமல் technology wise : way ahead.
இணையத்தில் லைவ் ஸ்ட்ரீமாகவும் காண முடிவது வெகு சிறப்பு.
இதன் தரம் போகப்போக தேயாமல் இருக்க ஆண்டவரை பிரார்த்திப்போம்.
————————————————-
வருடா வருடம் TIME Magazine – Man of the Year அட்டைப்படத்தில் வெளியிடும்.கடந்த வருடம் facebook மொதலாளி Mark Zukkerberg.இந்த வருடம் “PROTESTER”.

TIME man of the year 2011
இந்த வருடம் தான் ஏகப்பட்ட போராட்டங்கள்.எகிப்தில் ஆரம்பித்து இந்தியா வரை.இந்தியாவிலே அட்டைக்கத்தி அண்ணா ஹஜாரே முதல் தங்கள் நிலங்களை காக்க போராடும் விவசாயிகள்,காடுகளை,வாழ்வாதாரங்களை பாதுகாக்க போராடும் பழங்குடியின மக்கள் என போராட்டம் பல வடிவங்களில் நடக்கிறது.நடந்து கொண்டிருக்கிறது.தமிழ் நாட்டில் முல்லை பெரியார் பிரச்சனை,கூடங்குளம் அணு எதிர்ப்பு போன்ற பிரச்சனைகளில் மக்கள் தன்னெழுச்சியாக வீதிக்கு வந்து போராடிக்கொண்டிருக்கிறார்கள்.சூடு சொரனையற்ற அதிகார வர்க்கம் இந்த போராட்டங்களை முடிந்த வரை கொச்சைபடுத்தவும்,நீர்த்துப்போக செய்வதற்குண்டான வழிமுறைகளையும் செய்து பார்க்கிறது. ஆனால் மக்கள் சக்தி ஒற்றுமை என்கிற மிகப்பெரிய வலிமையை வைத்து போராடிக்கொண்டே இருக்கிறது.
மீடியாக்கள்,அதிகார வர்க்கம் எல்லாம் மக்களுக்கு எதிராக நின்றாலும்,மக்கள் சமுக ஊடங்கங்களின் உதவியோடு தங்கள் உரிமையை நிலை நாட்டிக்கொள்வது வரலாற்றில் புதிது.
—————————————————-
ஒரு கவிதை
கடவுள் முன்னால் ஒரு கண்ணை மூடி ஒரு கண்ணை திறந்து நிற்கிறாள் அந்த சிறுமி . தப்பு செய்தால் சாமி கண்ணை குத்தும் என்கிறாள் அம்மா. சாமி தப்பு செஞ்சா நானும் சாமி கண்ணை குத்துவேன் என்கிறாள் சிறுமி கடவுள் சற்றே பயந்து பின்வாங்குகிறார்.
Vannadhasan
Dec 13th
மழை உங்களிடம் இதுவரை ஏதேனும் புகார்
சொல்லியிருக்கிறதா
ஒரு பச்சை புழுவை காணோம் வெகு நாட்களாக
ஒரு கூழாங்கல்லை ஒரு சிறுமி பொறுக்கிப் போய்விட்டதாக
ஒரு வானவில் மீன்கொத்திச் சிறகாக உதிர்ந்து விட்டதாக
நீங்கள் உங்கள் வீட்டுச் சிறுவனை
நனையக்கூடாது என்று தடுத்துவிட்டதாக
வெளியே வந்து எதையும் பாராமல்
முட்டாள் பெட்டி முன் நீங்கள் சாய்ந்து கிடப்பதாக
இல்லை அல்லவா
அப்புறம் நீங்கள் ஏன் மழை குறித்து
இவ்வளவு புகார்களை எல்லோரிடமும்
வீட்டுக்குள் தேனீர் அருந்திக்கொண்டே
சொல்லிக்கொண்டு இருக்கிறீர்கள்
- Vannadhasan @ Kalyanji
வண்ணதாசன் கேணி சந்திப்பு பற்றி குறுஞ்செய்தி வந்ததும், மனம் படபடத்தது.அவரை இந்தமுறை எப்படியும் சந்தித்து விட வேண்டும் என ஒரு பேராவல். சந்தித்து விட்டேன்.
எதிர்பார்க்கவே இல்லை
அந்தக்கவிஞரின் புதியவீட்டுச்
சுற்றுச் சுவர்களில்
எந்தப் பறவைகளும்
பூனைக்குட்டிகளும்
அமர முடியாதபடி
கண்ணாடிச்சில்லுகள்
பதிக்கப்பட்டிருக்கும் என
–வண்ணதாசன்
Chennai Super Kings did it finally.Yey
Apr 27th

Though i’m not an ardant fan of cricket,I was hooked up by my friends to keep hold of IPL3.Yes! It was really an engrossing experience.IPL is a good blend of sport and entertainment. Mathew hayden’s Mangoose magic against Delhi and Murali vijay’s technically brilliant 127 against Rajasthan royals created a lot of interest towards watching IPL. Youtube have telecasted IPL3 was the added advantage like us who don’t own TV and depending internet for everything! ;-D.
I was in Chennai at the CSK Vs MI finals.First half of the match was not so interesting since the Chennai super Kings men set a decent 168 target.The chasing match was the real thrill one.CSK bowlers bowled and contained very well.Sachin was in the field,The required run rate was high.But sachin was playing.So no hope for CSK.Once he returned back to the pavilion,the tension builded in a big way.The match turned favour to CSK side.I was bit happy.But when pollard came and hit huge sixes,the whole crowd in DY patil stadium gone mad.The balls touched boundaries quite frequently. For one six,the ball grounded at Third floor of the stadium.I thought Dhoni’s dream gone.But Dhoni talked with mathew hayden and the bowler.Dhoni asked Hayden to stand in Mid-off which is a rare fielding spot.That idea really worked well.Pollard is OUT.Dhoni’s on field strategy worked BIG.The whole stadium was in shock.”Final”ly CSK won.There was firecrackers ignited everywhere in chennai nungambakkam area.The whole skyline of chennai was filled with fireflowers.Bliss.CSK was the underdogs.Lost the Final in the first IPL.This time team CSK justified their Name : Chennai Super Kings.
அங்காடி தெரு – எளிய மனிதர்களின் சினிமா
Apr 3rd

தன் தந்தை விபத்தில் இறந்ததும் வாழ்க்கை,படிப்பு,கனவு எல்லாம் சிதைந்து விடுகிறது ஜோதிலிங்கத்திற்கு.சென்னையில் இருக்கும் பிரமாண்டமான கடையில் வேலை செய்ய வரும் அவனுக்கும் அவன் நண்பனுக்கும்,ஆரம்பமே அதிர்ச்சி.ஜெயிலை விட மோசமான நிலையில் இருக்கும் தங்குமிடம்,ஓய்வில்லாத வேலை எல்லாம் அவர்களை சொந்த ஊருக்கே திரும்பி செல்ல எண்ண வைக்கிறது.A/C அறையில் வேலை மாற்றப்பட்டது தான் அவர்களின் Promotion.கூடவே வேலை செய்யும் கனி(அஞ்சலி)யிடம் முதலில் முறைத்துக்கொண்டாலும் பின் காதல் துளிக்கிறது.அங்கே இருக்கும் சூபர்வைசர்(Director A.Venkatesan) கற்பனைக்கும் எட்டாத கொடூரங்களை செய்யும் ஒருவன்.காதல் செய்வது அங்கு தடை செய்யப்பட்டிருக்கும் சூழலில்,இவர்களின் காதலும்,வாழ்க்கையும் கடைசியில் என்னவாகிறது என்பதே கதை.
யாருக்கும் வராத துணிவு வசந்தபாலனுக்கு வந்திருக்கிறது.அவரின் இந்த தைரியத்திற்கு என் பாராட்டுக்கள்.சென்ற வருடம் எழுத்தாளர் சாரு நிவேதிதா புத்தக வெளியீட்டு விழாவில் அவரை பார்க்க முடிந்தது குறித்து இப்பொழுது பெருமைப்படுகிறேன்.ஆள் பலம்,பண பலம் எல்லாவற்றுடனும் வலையவரும் ஒரு கூட்டத்தின் அத்துமீரல்களை ஒரு தொழிற்சங்க போராளியைப்போல அம்பலப்படுத்தியிருக்கிறார்.
திரைக்கதையில் பல்வேறு sub-plots இருந்தாலும் எந்தவித குழப்பமும் இல்லாமல் பயணிப்பது இனிய ஆச்சர்யம்.புதுமுகம் மகேஷ் ஆச்சர்யப்படுத்துகிறார்.கனியாக நடித்திருக்கும் அஞ்சலியை பாராட்ட வார்த்தைகளே இல்லை.படம் முழுக்க திருநெல்வேலி தமிழ் விரவிக்கிடக்கிறது.ஜெயமோகனின் வசனங்கள் பார்வையாளனை பல இடங்களில் நேரடியாகத்தாக்குகின்றன.நான் படம் பார்த்த திருவான்மியூர் ஜெயந்தியில் முழுக்க தொழிலாளர் முகங்கள்.படம் ஓடிக்கொண்டிருந்த போது அவர்களை முகங்களை அவ்வப்போது கவனித்தேன்.சில இடங்களில் கொண்டாட்ட மனநிலையிலும்,சில காட்சிகளில் அடக்கமுடியாத கண்ணீருடனும் பார்த்துக்கொண்டிருந்தனர்.படம் எங்களுடன் நேரடியாக உரையாடிக்கொண்டிருந்தது. வசந்தபாலன் தன் முந்தைய படமான வெய்யிலில் அதிகமான Melodramaவை கலந்திருப்பார்.இந்தப்படத்தில் எல்லோரும் அவர்களின் இயல்புடனே இருக்கிறார்கள்.நான் மிகவும் ரசித்த விஷயம் இது.

படத்தின் கிளைக்கதைகள் தான் நான் இந்தப்படத்தை தூக்கி கொண்டாட ஒரே காரணம்.
- கதாநாயகனின் கூடவே இருக்கும் மாரிமுத்துவின் காதல்
- கடைக்குள் நடக்கும் காதலும்,அதன் பிறகு நடக்கும் துயரமும்
- தெருவில் போகும் ஊனமுற்றவர்,அவர் மனைவி,முஸ்லீம் பெரியவர் சார்ந்த கதை
- கனியின் தங்கை சம்பந்தப்பட்ட காட்சி
- கதாநாயகனின் தங்கை, கடைப்பைக்காக பின் தொடரும் ஒரு அற்புதமான குரும்படம்
இப்படி படம் முழுக்க கிளைக்கதைகள் நம்மை அசரடிக்கின்றன.யாரும் தொழில் முறை நடிகர்கள் இல்லை.ஆனால் நம்மால் அவர்களில் வாழ்க்கையை தரிசிக்க முடிகிறது.
இப்படிப்பட்ட படத்தின் தரத்தை குறைக்கும் இரண்டு விஷயங்கள் 1.பாடல்கள் 2.பின்னனி இசை.
சில பாடல்கள் கதையின் நம்பகத்தன்மையை,வேகத்தை குறைக்கின்றன. பின்னனி இசை நாலாந்தர மசாலா படத்தின் இசையைபோல் இருக்கிறது.இசை அனுபவமாககூட இருக்க வேண்டாம்,குறைந்த பட்சம் அந்த அற்புதமான நடிகர்களின் உணர்வுகளையாவது பிரதிபலித்து இருக்கலாம்.படம் முழுவதும் தொடரும் துயரங்கள் அயர்ச்சியை ஏற்படுத்துகின்றன.சில காட்சிகளில் செயற்கைத்தனம் மிகுந்து காணப்படுகிறது.
பொதுவாகவே மனித உரிமை என்பதற்கு இந்தியாவில் பலருக்கு அர்த்தம் தெரிவதில்லை.அடுத்தவனின் சொத்தை,உழைப்பை,ஆளுமையை கூச்சமே இல்லாமல் திருடுவது இயல்பாகி விட்டது.அதற்கு எதிரான குரல் ஒரு முனகலை போன்றே ஒலிக்கிறது.எப்போதும்,ஒரு படத்தை பற்றிய என் பார்வையை பதியும் முன்,இரண்டு மூன்று முறை அந்த படத்தை பார்ப்பது உண்டு.ஆனால் இந்த படத்தை முதல் முறை பார்த்ததுமே எனக்கு இரண்டாவது முறை பார்க்கும் தைரியம் இல்லை என்பதை உணர்ந்துகொண்டேன்.மையங்களை மட்டும் வெளிச்சம் போட்டு காட்டிக்கொண்டிருந்த தமிழ் சினிமா,விளிம்புகளையும் கவனிக்க ஆரம்பித்திருக்கிறது. அங்காடி தெரு மூலமாக எளிய மனிதர்களின் முகங்களும்,வாழ்க்கையும் திரையில் வியாபித்திருக்கின்றன அந்த வகையில் தமிழ் சினிமாவில் நடந்திருக்கும் மிகப்பெரிய Shift.
Thanks : www.shaaji.com
To Read full article Click : http://musicshaji.blogspot.com/2010/05/by.html
விண்ணைத்தாண்டி வருவாயா – காதலின் பெரும் துயரம்
Mar 12th
காதலின் அவஸ்தை,காதல் கொடுக்கும் வலி தாங்கமுடியாத ஒன்றாகவே இருக்கிறது.எத்தனையோ வாழ்வியல் மாற்றங்கள் வந்தபோதும்,தொழில்நுட்பம் வளர்ந்திருந்தபோதும் காதல் மட்டும் மாறாமல் இருக்கிறது.
இந்த உலகத்தில எத்தனையோ பொண்ணுங்க இருக்கும்போது நான் ஏன் ஜெஸ்ஸிய காதலிச்சேன்?
இது தான் விண்ணைதாண்டி வருவாயா படத்தின் முதல் வசனம்.அதன் பிறகு திரையில் விரிவது ஒரு மூன்று மணி நேர மாயாஜாலம்.ஜெஸ்ஸி,கார்த்திக் என்ற யாரோ இருவரின் வலி மிகுந்த காதல்.
பெங்களூரு PVRல் நள்ளிரவு காட்சி முடிந்து வெளியே நடந்து வரும் போது,ஏதோ மனம் ஆழ்ந்த துயரத்தில் இருந்ததை உணர முடிந்தது.பொறியியல் படித்துவிட்டு திரைப்பட இயக்குனராக ஆசைப்படும் தமிழ் இந்து பையனுக்கும்,Program analystஆக இருக்கும் மலையாளி கிருஸ்தவ பெண்ணுக்கும் இடையில் இருக்கும் காதல்,மோதல் பிரிவுதான் kathai.மிக மிக பார்த்து சலித்த இந்த கதைக்கரு எப்படி ஒரு உயர்தர சினிமாவாக உருவாகியிருக்கிறது என்பதை பகிர்ந்து கொள்ளத்தான் இந்த பதிவு.
வழக்கம்போல் ஜெஸ்ஸியை பார்த்தவுடன் காதல் வந்து விடுகிறது கார்த்திக் பையனுக்கு.
இயக்குனர் கொளதம் மேனன் திரைக்கதை மிக மிக உயர்ந்த தரத்தில் இருக்கிறது.தன் வாழ்க்கையின் மிக அற்புதமான கணங்களை பதிவு செய்திருப்பதாகவே தோன்றுகிறது.
இந்தப்படத்தில் சிம்புவும் திரிஷாவும் செய்திருப்பது ஒரு மாயாஜாலம்.அவர்கள் career ல் உச்சபட்ச நிலை.

Mobile Application Conference @bangalore
Oct 15th
Hey,
Just wanted to let you know about an exciting event siliconindia is organizing on October 31st (Saturday in Bangalore). This is a full-day conference that will explore the new opportunities that are emerging and ask the larger questions of the industry leaders within mobile space, shedding some light on where the industry is headed and how entrepreneurs and developers can take advantage.
Come listen to some of the brightest minds in mobile technology discuss the future of mobile technology.
SPEAKERS
Arvind Rao, Chairman, CEO and Co-founder, OnMobile
Vishwanath Alluri, CEO,Chairman and Founder IMImobile
Vishnu Sunderam, Co-founder CEO, Interchain Solutions
Selvamuthiah Somasundaram, Sr. VP & Co-Founder, Satnav
Raj Oswal, Founder & CEO, O’interface
Dilip R Mehta, IIM Bangalore, Ex-MD RPG Cellular and HMV Saregama
Prashant Dogra, Customer Marketing Manager, Navteq
Shanker Janakiraman, Director & CEO – India, Symbioun Technologies
TOPICS:
Mobile applications explode. Who wins and who loses?
Carriers and handset makers want a piece, too: Where will they go?
LBS Challenge: Maximising Revenue and Engaging the Consumer
Mobile Payment Services: The Road Ahead
Mobile Marketing
Sponsors: Nokia, Sun, Navteq, Satnav
Exhibiting companies: Eterno, iPath, MapmyIndia, Mobikwik, OnMobile, ObjectSol, Satnav, ShortHand, Symbioun, Tencube, Trakut, Trademarkia, Vassoft, Wirkle
WHEN: October 31, 2009 (Saturday)
TIME: 9 AM to 6 PM
WHERE: NIMHANS Convention Center, Near Diary Circle, Bangalore
To attend this event, register FREE at http://www.siliconindia.com/mobileconference/register.php








Recent Comments