prabhu raj blog

சொல்லத் துடிக்குது மனசு – 2
மதிப்பீடுகள் வீழ்ந்து கிடக்கும் தமிழ் வாழ்வில் மக்கள் எப்படியோ அப்படிதான் அரசியல்வாதிகள்,அதிகாரிகள் இருப்பார்கள்.மீடியாவும் அப்படியே.தமிழகத்தில்  தொலைக்காட்சிகள் மக்களுக்கு குப்பையைத்தான் நுகர கொடுத்துக்கொண்டிருக்கின்றன.திரிக்கப்பட்ட செய்திகள்,நடுநிலையற்ற பார்வைகள்,தான்தோன்றித்தனம் இவை எல்லாவற்றின் மொத்தக்கலவையாகத்தான் டிவி சானல்கள் இருந்து வருகின்றன.

விவாதங்கள் முன் முடிவுகளை வைத்தே ஆரம்பிக்கப்படுகின்றன.ஆபாசமான சினிமாப்பாடல்கள், முட்டாள்தனமான சீரியல்கள்,பாசாங்கான ரியாலிட்டி ஷோக்கள்,தொலைக்காட்சியை  நடத்தும் கட்சியின் ஊதுகுழலாக செய்தி சானல்கள் இந்த களேபரத்துக்கு  மத்தியில் ஒரு சிறு நம்பிக்கையாக ஒரு செய்தி சானல் வந்திருக்கிறது.அது புதிய தலைமுறை.

தெளிவான செய்திகள்,விவாதங்கள் மட்டுமல்லாமல் technology wise : way  ahead.

இணையத்தில் லைவ் ஸ்ட்ரீமாகவும் காண முடிவது வெகு சிறப்பு.

http://puthiyathalaimurai.tv/

இதன் தரம் போகப்போக தேயாமல் இருக்க ஆண்டவரை பிரார்த்திப்போம்.

வருடா வருடம் TIME Magazine  – Man of the Year அட்டைப்படத்தில்  வெளியிடும்.கடந்த வருடம் facebook மொதலாளி Mark Zukkerberg.இந்த வருடம்  “PROTESTER”.

TIME man of the year 2011

இந்த வருடம் தான் ஏகப்பட்ட போராட்டங்கள்.எகிப்தில் ஆரம்பித்து  இந்தியா வரை.இந்தியாவிலே அட்டைக்கத்தி அண்ணா ஹஜாரே  முதல் தங்கள் நிலங்களை  காக்க போராடும் விவசாயிகள்,காடுகளை,வாழ்வாதாரங்களை   பாதுகாக்க போராடும்  பழங்குடியின மக்கள் என போராட்டம் பல வடிவங்களில்  நடக்கிறது.நடந்து கொண்டிருக்கிறது.தமிழ் நாட்டில் முல்லை  பெரியார்  பிரச்சனை,கூடங்குளம் அணு எதிர்ப்பு போன்ற பிரச்சனைகளில் மக்கள்  தன்னெழுச்சியாக  வீதிக்கு வந்து போராடிக்கொண்டிருக்கிறார்கள்.சூடு  சொரனையற்ற அதிகார  வர்க்கம் இந்த போராட்டங்களை முடிந்த வரை கொச்சைபடுத்தவும்,நீர்த்துப்போக  செய்வதற்குண்டான வழிமுறைகளையும் செய்து  பார்க்கிறது. ஆனால் மக்கள் சக்தி  ஒற்றுமை என்கிற மிகப்பெரிய வலிமையை  வைத்து போராடிக்கொண்டே இருக்கிறது.

மீடியாக்கள்,அதிகார வர்க்கம் எல்லாம் மக்களுக்கு எதிராக   நின்றாலும்,மக்கள் சமுக ஊடங்கங்களின் உதவியோடு தங்கள் உரிமையை நிலை   நாட்டிக்கொள்வது வரலாற்றில் புதிது.

ஒரு கவிதை

கடவுள்  முன்னால்
ஒரு கண்ணை மூடி ஒரு  கண்ணை திறந்து நிற்கிறாள்
அந்த  சிறுமி .

தப்பு செய்தால் சாமி கண்ணை குத்தும்
என்கிறாள் அம்மா.

சாமி தப்பு செஞ்சா நானும்
சாமி கண்ணை குத்துவேன் என்கிறாள் சிறுமி

கடவுள் சற்றே பயந்து பின்வாங்குகிறார்.

சொல்லத் துடிக்குது மனசு – 1
சொல்லத் துடிக்குது மனசு

சொல்வதற்கு நிறைய இருக்கிறது.பார்ப்பது,படிப்பது,கேட்பது என பல.

அனால் எழுதுவது ஒரு தவத்தை போல்.நேரம்,மனநிலை எல்லாம் கூடி வர வேண்டும்.அதிகமாக எழுதாமல்

கொஞ்சமாக அதே நேரத்தில் சொல்லவந்ததை சொல்லும் கலை இருப்பவர்கள் வெகு அரிது.எதோ ஒரு ஆர்வத்தில் இந்த

முயற்சியை எடுத்திருக்கிறேன்.பார்ப்போம்..

LOBBY :  லாபி விஷயத்தில்  தமிழர்கள் மிக மோசமாக இருக்கிறோம்.கன்னட இலககியம் 8 ஞானபீட விருதுகளை வாங்கியிருக்கிறது.மலையாளம் 6 ஹிந்தி 6 .

ரயில்வே திட்டங்கள்,சினிமா தேசிய விருதுகள்,மதிய அரசின் புதிய திட்டங்களில் எல்லாம் லாபி புகுந்து விளையாடுவது நிதர்சனமான உண்மை.இலக்கியத்தில் எடுத்துக்கொண்டால் தமிழ் நவீன இலககியம் வேறு எந்த இந்திய மொழிகளை விடவும் முன்னோக்கி இருக்கிறது.சாகித்ய அகாடமி,ஞான பீட விருது எல்லாம் நம் கைக்கு எட்டுவதே இல்லை.இதனால் தமிழ் இலக்கிய செயல்பாடுகளை பற்றி வெளியில் அவ்வளவாக தெரியவில்லை.

கொஞ்ச நாளாக தமிழ் சினிமா இந்த விஷயத்தில் இந்திய அளவில் தன் அவப்பெயரை மாற்றிக்கொண்டிருக்கிறது.திட்டங்கள் விஷயத்தில் மக்கள் தங்கள் பிரதிநிதிகளை கேள்வி கேட்பதும்.கலை இலக்கிய விஷயத்தில் நம் பெருமையை தயங்காமல் மற்றவர்களுக்கு சொல்வதும் தான் இந்த பிரச்சனைக்கு ஒரே வழி.

இந்த வருட ஞான பீட விருதை பெற்ற கன்னட நாடக எழுத்தாளர் சந்திர சேகர கம்பரை விடவும் மிகச்சிறந்த ஆளுமைகள் தமிழில் சமகாலத்தில் இயங்கிக்கொண்டிருக்கிறார்கள்.

ஒரு கவிதை

எதிராளியை வீழ்த்திவிடும்

ஒரு பெண்புலியின் தீர்க்கமான பார்வை

மறுபேச்சு பேச முடியாத

அவளின் ஒற்றை வார்த்தை

நெருப்பைப்போல் சட்டென பற்றும் கோபம்

இதெல்லாம் போக

ஒரு குழந்தை அவள் கையில் கொடுக்கப்பட்டதும்

அதனுடனான  உரையாடலுக்கு

வெகு சீக்கிரத்தில் தயாராகி விடுகிறாள்

என் அம்மா.

– பிரபு ராஜ்

ஊரின் மிக அழகான ஆணும்,வெள்ளை நாய்குட்டியும் மற்றும் நானும்
சனிக்கிழமை அவசரமான வேலை வந்து விட்டது.இல்லையென்றால் காலையிலே சென்றிருப்பேன் பனையூருக்கு.மாலை 5 மணிக்குத்தான் கிளம்ப முடிந்தது.நீலாங்கரையை நெருங்கும்போது தூறல்.சிறிய பதட்டம்.மாலையும் முன்னிரவும் சந்திக்கும் அந்திமாலை நேரத்தில்தான் நான் அன்பானவர்களுடன் இருக்க ஆசைப்படும் நேரம்.நல்லவேளை தூறல் நின்று, என் அன்பு எழுத்தாளர் சாருவுடன் அந்த நேரத்தில் இருக்கும் வாய்ப்பு கிடைத்து விட்டது.மழைக்கு நன்றி.

நான் நுழைந்தபோது கண்ட காட்சியை இப்போதும் நினைத்து ரசிக்கிறேன்.கல்யாண வீடு போல் இருந்தது.வரவேற்பு,கைகுலுக்கல்,உள்ளே சீனு மேற்பார்வையில்,காய்கறி வெட்டிக்கொண்ட்டிருந்தார்கள்(ஸலாதுக்கு) நாலு பேர்.

நீச்சல் குளத்தில் வில்லன்,பாஸ்கர்,செல்வம் கும்பல் அதகளம் செய்து கொண்டிருந்தது.ஒரு பக்கம் சாருவின் எழுத்துக்களை வைத்து விவாதம்.இந்த களேபரத்திற்கு இடையில் ஒரு அழகான வெள்ளை நாய்க்குட்டி சோஃபாவில் தூங்கிக்கொண்டிருந்தது.எந்த பதட்டமும் இல்லை அதற்கு.எங்களை போன்ற அராத்துகளின் துணையை அது மிகவும் விரும்பியிருக்க வேண்டும்.

(pictures : parthiban)

சிறிது நேரத்தில் சாரு நீச்சல் குளத்தில் எங்களுடன் சேர்ந்து கொண்டார்.பகார்டி,ரெமி மார்ட்டின், ஒலிவ் காய்கள்,கிரீன் ஆப்பிள் சகிதம் இலக்கிய விவாதம் ஆரம்பம்….

நான் சில நாட்களுக்கும் முன்னால் டெல்லி சென்றபோது மயூர் விஹார்,கன்னாட் பிளேஸ்,ராஜிவ் சவுக்,திரிலொக்புரி  முதலிய இடங்களுக்கு செல்லும் போது சாருவும் என்னுடன் கூடவே பயணித்தார்.அவரின் பல அற்புதமான சிறுகதைகளில் டெல்லி ஒரு முக்கியமான கதாபாத்திரமாகவே இருக்கிறது.மிதமான போதையில் நீச்சல் அடித்துக்கொண்டே இதை அவரிடம் பகிர்ந்துகொண்டேன்.டெல்லி என்று சொன்னதும் அவர் முகத்தில் ஒரு பிரகாசம் இருந்ததை உணர முடிந்தது.

பிறகு பேச்சு exile,காமரூப கதைகள் என்று மாறியது.ஊரின் மிக அழகான பெண் என்றதும், கவிதாயினி தமிழச்சி தங்க பாண்டியனை பற்றி பேச்சு மாறியது.நான் ஊரின் மிக அழகான ஆண்?? யார் என்று கேட்டதும்

மொத்த கும்பலும் சொன்னது “சாரு நிவேதிதா”. தெத்துப்பல் சிரிப்பும்,வெண்தாடியும்..attractive.

உயிர்ம்மை விழாவில் சாருவுக்கு மோதிரம் போட்ட நாகராஜன் எங்களுடன் இணைந்துகொண்டார்.

8 மணிக்கு அடுத்த அமர்வு ஆரம்பித்தது, ஜீரோ டிகிரி,ராசலீலா விலிருந்து ஆரம்பித்த விவாதம் ஷேக்ஸ்பியரில் நிலைகொண்டது.ஒவ்வொருவரின் பங்களிப்பும் சிறப்பாக இருந்தது.நான் என் ரத்த நாளங்களில் ஒடிக்கொண்டிருக்கும் சாருவின் எழுத்துக்களை பகிர்ந்து கொண்டேன்.எப்படி அவர் என் சிந்தனை,எழுத்து,enrichment of my sensibility,வாழ்வுமுறை,நட்பு போன்றவற்றில் எவ்வாறு பாதிப்பை நிகழ்த்தினார் என்று அவர் படைப்புகளில் வரும்,வந்த keywords சிலவற்றை பகிர்ந்து கொண்டேன்.

பிறகு மது,நடனம்,மது,நடனம்.

சளைக்காமல் எங்களுடன் தாளத்தின் லயத்திற்கேற்ப சாருவின் நடனம் அட்டகாசம்….connoisseur...

சில தமிழ் குத்து பாடல்களுக்கு ஆடியதில்,ஆட விட்டதில் எனக்கும் உவகையில்லை.அடுத்த சந்திப்பில் இதையும் கச்சிதமா ஏற்பாடு செய்வோம்.நடனம் ஆடும் ஆர்வத்தில் பலர் சாப்பிடவே இல்லை.கிச்சனில் உணவு அப்படியே இருந்தது.எல்லோருக்கும் உணவு கொண்டு சென்று (வலுக்கட்டாயமாக) சாப்பிட வைத்தேன்.சாரு,சீனிவாசன் இருவரும் தயிர்சாதம் பக்கம் போய்விட்டனர். நாய்குட்டி சாப்பிட்டதா என்று தெரியாததால் அதற்கும் உணவு எடுத்து எழுப்பினேன்.அது சிறிது சாப்பிட்டு விட்டு வாலை ஆட்டி,என் கையை நாக்கால் நக்கிவிட்டு தூங்கி விட்டது.ஒரு குழு போட்டது விடியும் வரை ஆட்டம்.கெட்ட ஆட்டம்.

இந்த சந்திப்பு மிக அழகாக திட்டமிடப்பட்டு நடந்திருக்கிறது.மகிழ்ச்சி!!

ஏன் எனக்கு சாருவை இவ்வளவு பிடிக்கிறது??

ஏனென்றால் நான் தான் சாரு.

என்னுடைய குணாதிசயங்கள் அப்படி.எந்தவித தரத்தையும் நாடாத தமிழ் வாழ்வில் சாரு கலகக்காரனாகத்தான் இருக்க முடியும்.

எருமைச்சாணியை போன்ற தமிழ் சினிமா(கோணல் பக்கங்கள்),காதை கிழிக்கும் இசை,மது பானம் என்ற பெயரில் கழுதை மூத்திரம்…இப்படி இருக்கும் தமிழ் வாழ்வில் கதையோ,கட்டுரையோ சாருவின் குரல் தனித்து தான் ஒலிக்கிறது.

சாருவை வெருப்பவர்கள் தான் அவரை விரும்புபவர்களை விட அதிகமாக நினைக்கிறார்கள்.நானைல்லாம் ஒன்றும் இல்லை சாருவின் மற்ற fanatics முன்னால்.கடைசியாக இரண்டே விஷயம்.பாரதி படத்தில் பாரதியை காட்டி காந்தி சொல்வதாக ஒரு வசனம் வரும் “இவரை பத்திரமாக பார்த்துக்கொள்ளுங்கள்”.சாருவை பத்திரமாக பார்த்துக்கொள்வது நம் கடமை.இந்த வயதில் அவர் தன்னை காதலித்து பராமரிக்கும் விஷயம்,உழைப்பு மற்றும் எழுத்துக்காண அற்பணிப்பு..Inspiring..

சுஜாதா தமிழை 18 வயது பெண்ணை போல மாற்றினார்.சாரு தமிழை 13 வயது பெண் போல் மாற்றியிருக்கிறார்.Pleasure of Text விஷயத்தில் சாருவைப்போல் சுவாரஸ்யமான எழுத்தாளர் உலகிலேயே மிகக்குறைவு.

பி.கு:

அடுத்த சந்திப்பிற்கு முன்னால் சாருவின் புத்தகங்கள் ஒன்று விடாமலும்,ஃபோர்ஹேஸ்,ழார் பத்தாயின் கண்ணின் கதை,சார்த்தரின் being and nothingness,மார்கேஸ் ஆகியவற்றையும் படித்து முடித்திருப்பேன்.அப்படி இல்லையென்றால் அடுத்த சந்திப்பில் கலந்து கொள்வதில்லை என்று முடிவெடுத்திருக்கிறேன்.

yarning for Aviator Sunglasses

Vannadhasan
மழை உங்களிடம் இதுவரை ஏதேனும் புகார்

சொல்லியிருக்கிறதா

ஒரு பச்சை புழுவை காணோம் வெகு நாட்களாக

ஒரு கூழாங்கல்லை ஒரு சிறுமி பொறுக்கிப் போய்விட்டதாக

ஒரு வானவில் மீன்கொத்திச் சிறகாக உதிர்ந்து விட்டதாக

நீங்கள் உங்கள் வீட்டுச் சிறுவனை

நனையக்கூடாது என்று தடுத்துவிட்டதாக

வெளியே வந்து எதையும் பாராமல்

முட்டாள் பெட்டி முன் நீங்கள் சாய்ந்து கிடப்பதாக

இல்லை அல்லவா

அப்புறம் நீங்கள் ஏன் மழை குறித்து

இவ்வளவு புகார்களை எல்லோரிடமும்

வீட்டுக்குள் தேனீர் அருந்திக்கொண்டே

சொல்லிக்கொண்டு இருக்கிறீர்கள்

- Vannadhasan @ Kalyanji

வண்ணதாசன் கேணி சந்திப்பு  பற்றி குறுஞ்செய்தி வந்ததும், மனம் படபடத்தது.அவரை இந்தமுறை எப்படியும் சந்தித்து விட வேண்டும் என ஒரு பேராவல். சந்தித்து விட்டேன்.

எதிர்பார்க்கவே இல்லை

அந்தக்கவிஞரின் புதியவீட்டுச்

சுற்றுச் சுவர்களில்

எந்தப் பறவைகளும்

பூனைக்குட்டிகளும்

அமர முடியாதபடி

கண்ணாடிச்சில்லுகள்

பதிக்கப்பட்டிருக்கும் என

–வண்ணதாசன்

Shaaji’s Isaiyin Thanimai – A discussion
ALL ARE WELCOME

Chennai Super Kings did it finally.Yey
Though i’m not an ardant fan of cricket,I was hooked up by my friends to keep hold of IPL3.Yes! It was really an engrossing experience.IPL is a good blend of sport and entertainment. Mathew hayden’s Mangoose magic against Delhi and Murali vijay’s technically brilliant 127 against Rajasthan royals created a lot of interest towards watching IPL. Youtube have telecasted IPL3 was the added advantage like us who don’t own TV and depending internet for everything! ;-D.

I was in Chennai at the CSK Vs MI finals.First half of the match was not so interesting since the Chennai super Kings men set a decent  168 target.The chasing match was the real thrill one.CSK bowlers bowled and contained very well.Sachin was in the field,The required run rate was high.But sachin was playing.So no hope for CSK.Once he returned back to the pavilion,the tension builded in a big way.The match turned favour to CSK side.I was bit happy.But when pollard came and hit huge sixes,the whole crowd in DY patil stadium gone mad.The balls touched boundaries quite frequently. For one six,the ball grounded at Third floor of the stadium.I thought Dhoni’s dream gone.But Dhoni talked with mathew hayden and the bowler.Dhoni asked Hayden to stand in Mid-off which is a rare fielding spot.That idea really worked well.Pollard is OUT.Dhoni’s on field strategy worked BIG.The whole stadium was in shock.”Final”ly CSK won.There was firecrackers ignited everywhere in chennai nungambakkam area.The whole skyline of chennai was filled with fireflowers.Bliss.CSK was the underdogs.Lost the Final in the first IPL.This time team CSK justified their Name : Chennai Super Kings.

அங்காடி தெரு – எளிய மனிதர்களின் சினிமா
தன் தந்தை விபத்தில் இறந்ததும் வாழ்க்கை,படிப்பு,கனவு எல்லாம் சிதைந்து விடுகிறது ஜோதிலிங்கத்திற்கு.சென்னையில் இருக்கும் பிரமாண்டமான கடையில் வேலை செய்ய வரும் அவனுக்கும் அவன் நண்பனுக்கும்,ஆரம்பமே அதிர்ச்சி.ஜெயிலை விட மோசமான நிலையில் இருக்கும் தங்குமிடம்,ஓய்வில்லாத வேலை எல்லாம் அவர்களை சொந்த ஊருக்கே திரும்பி செல்ல எண்ண வைக்கிறது.A/C அறையில் வேலை மாற்றப்பட்டது தான் அவர்களின் Promotion.கூடவே வேலை செய்யும் கனி(அஞ்சலி)யிடம் முதலில் முறைத்துக்கொண்டாலும் பின் காதல் துளிக்கிறது.அங்கே இருக்கும் சூபர்வைசர்(Director A.Venkatesan) கற்பனைக்கும் எட்டாத கொடூரங்களை செய்யும் ஒருவன்.காதல் செய்வது அங்கு தடை செய்யப்பட்டிருக்கும் சூழலில்,இவர்களின் காதலும்,வாழ்க்கையும் கடைசியில் என்னவாகிறது என்பதே கதை.

யாருக்கும் வராத துணிவு வசந்தபாலனுக்கு வந்திருக்கிறது.அவரின் இந்த தைரியத்திற்கு என் பாராட்டுக்கள்.சென்ற வருடம் எழுத்தாளர் சாரு நிவேதிதா புத்தக வெளியீட்டு விழாவில் அவரை பார்க்க முடிந்தது குறித்து இப்பொழுது பெருமைப்படுகிறேன்.ஆள் பலம்,பண பலம் எல்லாவற்றுடனும் வலையவரும் ஒரு கூட்டத்தின் அத்துமீரல்களை ஒரு தொழிற்சங்க போராளியைப்போல அம்பலப்படுத்தியிருக்கிறார்.

திரைக்கதையில் பல்வேறு sub-plots இருந்தாலும் எந்தவித குழப்பமும் இல்லாமல் பயணிப்பது இனிய ஆச்சர்யம்.புதுமுகம் மகேஷ் ஆச்சர்யப்படுத்துகிறார்.கனியாக நடித்திருக்கும் அஞ்சலியை பாராட்ட வார்த்தைகளே இல்லை.படம் முழுக்க திருநெல்வேலி தமிழ் விரவிக்கிடக்கிறது.ஜெயமோகனின் வசனங்கள் பார்வையாளனை பல இடங்களில் நேரடியாகத்தாக்குகின்றன.நான் படம் பார்த்த திருவான்மியூர் ஜெயந்தியில் முழுக்க தொழிலாளர் முகங்கள்.படம் ஓடிக்கொண்டிருந்த போது அவர்களை முகங்களை அவ்வப்போது கவனித்தேன்.சில இடங்களில் கொண்டாட்ட மனநிலையிலும்,சில காட்சிகளில் அடக்கமுடியாத கண்ணீருடனும் பார்த்துக்கொண்டிருந்தனர்.படம் எங்களுடன் நேரடியாக உரையாடிக்கொண்டிருந்தது. வசந்தபாலன் தன் முந்தைய படமான வெய்யிலில் அதிகமான Melodramaவை கலந்திருப்பார்.இந்தப்படத்தில் எல்லோரும் அவர்களின் இயல்புடனே இருக்கிறார்கள்.நான் மிகவும் ரசித்த விஷயம் இது.

படத்தின் கிளைக்கதைகள் தான் நான் இந்தப்படத்தை தூக்கி கொண்டாட ஒரே காரணம்.

கதாநாயகனின் கூடவே இருக்கும் மாரிமுத்துவின் காதல்

கடைக்குள் நடக்கும் காதலும்,அதன் பிறகு நடக்கும் துயரமும்

தெருவில் போகும் ஊனமுற்றவர்,அவர் மனைவி,முஸ்லீம் பெரியவர் சார்ந்த கதை

கனியின் தங்கை சம்பந்தப்பட்ட காட்சி

கதாநாயகனின் தங்கை, கடைப்பைக்காக பின் தொடரும் ஒரு அற்புதமான குரும்படம்

இப்படி படம் முழுக்க கிளைக்கதைகள் நம்மை அசரடிக்கின்றன.யாரும் தொழில் முறை நடிகர்கள் இல்லை.ஆனால் நம்மால் அவர்களில் வாழ்க்கையை தரிசிக்க முடிகிறது.

இப்படிப்பட்ட படத்தின் தரத்தை குறைக்கும் இரண்டு விஷயங்கள் 1.பாடல்கள் 2.பின்னனி இசை.

சில பாடல்கள் கதையின் நம்பகத்தன்மையை,வேகத்தை குறைக்கின்றன. பின்னனி இசை நாலாந்தர மசாலா படத்தின் இசையைபோல் இருக்கிறது.இசை அனுபவமாககூட இருக்க வேண்டாம்,குறைந்த பட்சம் அந்த அற்புதமான நடிகர்களின் உணர்வுகளையாவது பிரதிபலித்து இருக்கலாம்.படம் முழுவதும் தொடரும் துயரங்கள் அயர்ச்சியை ஏற்படுத்துகின்றன.சில காட்சிகளில் செயற்கைத்தனம் மிகுந்து காணப்படுகிறது.

பொதுவாகவே மனித உரிமை என்பதற்கு இந்தியாவில் பலருக்கு அர்த்தம் தெரிவதில்லை.அடுத்தவனின் சொத்தை,உழைப்பை,ஆளுமையை கூச்சமே இல்லாமல் திருடுவது இயல்பாகி விட்டது.அதற்கு எதிரான குரல் ஒரு முனகலை போன்றே ஒலிக்கிறது.எப்போதும்,ஒரு படத்தை பற்றிய என் பார்வையை பதியும் முன்,இரண்டு மூன்று முறை அந்த படத்தை பார்ப்பது உண்டு.ஆனால் இந்த படத்தை முதல் முறை பார்த்ததுமே எனக்கு இரண்டாவது முறை பார்க்கும் தைரியம் இல்லை என்பதை உணர்ந்துகொண்டேன்.மையங்களை மட்டும் வெளிச்சம் போட்டு காட்டிக்கொண்டிருந்த தமிழ் சினிமா,விளிம்புகளையும் கவனிக்க ஆரம்பித்திருக்கிறது. அங்காடி தெரு மூலமாக எளிய மனிதர்களின் முகங்களும்,வாழ்க்கையும் திரையில் வியாபித்திருக்கின்றன அந்த வகையில் தமிழ் சினிமாவில் நடந்திருக்கும் மிகப்பெரிய Shift.

Thanks : www.shaaji.com

To Read full article Click : http://musicshaji.blogspot.com/2010/05/by.html

விண்ணைத்தாண்டி வருவாயா – காதலின் பெரும் துயரம்
காதலின் அவஸ்தை,காதல் கொடுக்கும் வலி தாங்கமுடியாத ஒன்றாகவே இருக்கிறது.எத்தனையோ வாழ்வியல் மாற்றங்கள் வந்தபோதும்,தொழில்நுட்பம் வளர்ந்திருந்தபோதும் காதல் மட்டும் மாறாமல் இருக்கிறது.

இந்த உலகத்தில எத்தனையோ பொண்ணுங்க இருக்கும்போது நான் ஏன் ஜெஸ்ஸிய காதலிச்சேன்?

இது தான் விண்ணைதாண்டி வருவாயா படத்தின் முதல் வசனம்.அதன் பிறகு திரையில் விரிவது ஒரு மூன்று மணி நேர மாயாஜாலம்.ஜெஸ்ஸி,கார்த்திக் என்ற யாரோ இருவரின் வலி மிகுந்த காதல்.

பெங்களூரு PVRல் நள்ளிரவு காட்சி முடிந்து வெளியே நடந்து வரும் போது,ஏதோ மனம் ஆழ்ந்த துயரத்தில் இருந்ததை உணர முடிந்தது.பொறியியல் படித்துவிட்டு திரைப்பட இயக்குனராக ஆசைப்படும் தமிழ் இந்து பையனுக்கும்,Program analystஆக இருக்கும் மலையாளி கிருஸ்தவ பெண்ணுக்கும் இடையில் இருக்கும் காதல்,மோதல் பிரிவுதான் kathai.மிக மிக பார்த்து சலித்த இந்த கதைக்கரு எப்படி ஒரு உயர்தர சினிமாவாக உருவாகியிருக்கிறது என்பதை பகிர்ந்து கொள்ளத்தான் இந்த பதிவு.

வழக்கம்போல் ஜெஸ்ஸியை பார்த்தவுடன் காதல் வந்து விடுகிறது கார்த்திக் பையனுக்கு.

இயக்குனர் கொளதம் மேனன் திரைக்கதை மிக மிக உயர்ந்த தரத்தில் இருக்கிறது.தன் வாழ்க்கையின் மிக அற்புதமான கணங்களை பதிவு செய்திருப்பதாகவே தோன்றுகிறது.

இந்தப்படத்தில் சிம்புவும் திரிஷாவும் செய்திருப்பது ஒரு மாயாஜாலம்.அவர்கள் career ல் உச்சபட்ச நிலை.

Mobile Application Conference @bangalore
Hey,

Just wanted to let you know about an exciting event siliconindia is organizing on October 31st (Saturday in Bangalore). This is a full-day conference that will explore the new opportunities that are emerging and ask the larger questions of the industry leaders within mobile space, shedding some light on where the industry is headed and how entrepreneurs and developers can take advantage.

Come listen to some of the brightest minds in mobile technology discuss the future of mobile technology.

SPEAKERS

Arvind Rao, Chairman, CEO and Co-founder, OnMobile

Vishwanath Alluri, CEO,Chairman and Founder IMImobile

Vishnu Sunderam, Co-founder CEO, Interchain Solutions

Selvamuthiah Somasundaram, Sr. VP & Co-Founder, Satnav

Raj Oswal, Founder & CEO, O’interface

Dilip R Mehta, IIM Bangalore, Ex-MD RPG Cellular and HMV Saregama

Prashant Dogra, Customer Marketing Manager, Navteq

Shanker Janakiraman, Director & CEO – India, Symbioun Technologies

TOPICS:

Mobile applications explode. Who wins and who loses?

Carriers and handset makers want a piece, too: Where will they go?

LBS Challenge: Maximising Revenue and Engaging the Consumer

Mobile Payment Services: The Road Ahead

Mobile Marketing

Sponsors: Nokia, Sun, Navteq, Satnav

Exhibiting companies: Eterno, iPath, MapmyIndia, Mobikwik, OnMobile, ObjectSol, Satnav, ShortHand, Symbioun, Tencube, Trakut, Trademarkia, Vassoft, Wirkle

WHEN: October 31, 2009 (Saturday)

TIME: 9 AM to 6 PM

WHERE: NIMHANS Convention Center, Near Diary Circle, Bangalore

To attend this event, register FREE at http://www.siliconindia.com/mobileconference/register.php