Posts tagged vannadhasan
Vannadhasan
Dec 13th
மழை உங்களிடம் இதுவரை ஏதேனும் புகார்
சொல்லியிருக்கிறதா
ஒரு பச்சை புழுவை காணோம் வெகு நாட்களாக
ஒரு கூழாங்கல்லை ஒரு சிறுமி பொறுக்கிப் போய்விட்டதாக
ஒரு வானவில் மீன்கொத்திச் சிறகாக உதிர்ந்து விட்டதாக
நீங்கள் உங்கள் வீட்டுச் சிறுவனை
நனையக்கூடாது என்று தடுத்துவிட்டதாக
வெளியே வந்து எதையும் பாராமல்
முட்டாள் பெட்டி முன் நீங்கள் சாய்ந்து கிடப்பதாக
இல்லை அல்லவா
அப்புறம் நீங்கள் ஏன் மழை குறித்து
இவ்வளவு புகார்களை எல்லோரிடமும்
வீட்டுக்குள் தேனீர் அருந்திக்கொண்டே
சொல்லிக்கொண்டு இருக்கிறீர்கள்
- Vannadhasan @ Kalyanji
வண்ணதாசன் கேணி சந்திப்பு பற்றி குறுஞ்செய்தி வந்ததும், மனம் படபடத்தது.அவரை இந்தமுறை எப்படியும் சந்தித்து விட வேண்டும் என ஒரு பேராவல். சந்தித்து விட்டேன்.
எதிர்பார்க்கவே இல்லை
அந்தக்கவிஞரின் புதியவீட்டுச்
சுற்றுச் சுவர்களில்
எந்தப் பறவைகளும்
பூனைக்குட்டிகளும்
அமர முடியாதபடி
கண்ணாடிச்சில்லுகள்
பதிக்கப்பட்டிருக்கும் என
–வண்ணதாசன்
வண்ணதாசன் – மிக மிக ஆழ்ந்த கவனத்தோடு அணுக வேண்டிய படைப்பாளி
Mar 4th
வண்ணதாசன் (Vannadaasan) என்ற புனைப்பெயரில் சிறுகதைகளும், கல்யாண்ஜி (Kalyanji) என்ற புனைப்பெயரில் கவிதைகளும் எழுதுபவரின் இயற்பெயர், எஸ்.கல்யாணசுந்தரம் (S.Kalayanasundaram). இவர் திருநெல்வேலியில் பிறந்தவர். நவீன தமிழ்ச் சிறுகதை உலகில் மிகுந்த கவனம் பெற்ற எழுத்தாளரான வண்ணதாசன், ‘தீபம்’ இதழில் எழுதத் துவங்கியவர். 1962ல் இருந்து இன்று வரை தொடர்ந்து சிறுகதைகள் எழுதி வருகிறார். இவரது கதையுலகம் பிரியமும் கருணையும் நிரம்பியது. சக மனிதர்களின் மீதான அன்பும், அன்றாட வாழ்வு தரும் நெருக்கடியை மீறி மனிதன் நெகிழ்வுறும் அபூர்வ கணங்களைப் பதிவு செய்வதும் இவரது எழுத்தின் வலிமையாகச் சொல்லலாம்.
இவரது சிறுகதைகள் பல்கலைக்கழகங்களில் பாடமாக வைக்கப்பட்டிருக்கின்றன. இலக்கிய சிந்தனை உள்ளிட்ட பல முக்கிய விருதுகளைப் பெற்றிருக்கிறார் வண்ணதாசன்.
சிறுகதைத் தொகுப்புகள்
- கலைக்க முடியாத ஒப்பனைகள்
- தோட்டத்துக்கு வெளியிலும் சில பூக்கள்
- சமவெளி
- பெயர் தெரியாமல் ஒரு பறவை
- மனுஷா மனுஷா
- கனிவு
- நடுகை
- உயரப் பறத்தல்
- கிருஷ்ணன் வைத்த வீடு


Recent Comments