Tamil

Tamil write ups will come under this cate.with unicode

ஒரு தேவதையின் பார்வை

சுருங்கி கிடக்கும் ஒரு நாளை
ஒரு தேவதையின் பார்வை
விரிவாக்குகிறது.

சிறிய மனிதர்களை வாகனங்களில்
பத்திரமாக அழைத்துச்செல்கிறார்கள்
பெரிய மனிதர்கள்.

கடந்து செல்லும் பாதையில்
மரமொன்று இலைகளை உதிர்த்துவிட்டு
தலை முழுதும் பூக்களோடு
வெட்கப்பட்டுக் கொண்டிருக்கிறது.

வழக்கமாக வாகன இரைச்சல்களால்
பதட்டமான கண்களோடு நடக்கும்
பசு ஒன்று..ஜென் துறவியைப்போல்
ஆழ்ந்த சிந்தனையில் நின்றுகொண்டிருக்கிறது

மைதானத்தில் கால்பந்து விளையாடும்
சிறுவர்களில் ஒருவனின் சிரிப்பு
என் பால்ய நண்பனின் சிரிப்பைப்போல
வசீகரமாயிருக்கிறது..

காலி செய்யப்பட்ட பூக்கடையிலிருந்து
மிச்சமிருக்கும் வாசணை
காற்றில் அலைகிறது

நான் முன்னே சொன்னது போல்
சுருங்கி கிடக்கும் ஒரு நாளை
ஒரு தேவதையின் பார்வை
விரிவாக்குகிறது.

என் சில கவிதைகள்

மறந்துவிட்டாயா அம்மா

அம்மா என்ன சொன்னாய் நீ..
மறந்துவிட்டாயா?
மழை வேண்டுமென்று கேட்டேனே..
கையில் பிடித்து தருகிறேன்
விரலிடுக்கில் துளிகளை
நழுவ விட்டுவிடாதே என்றாயே..

விரல்களை இறுக்க குவித்து
கையேந்தியபடி இருக்கிறேன்..

எங்கே அம்மா மழை ?..

************

கண்ணீர் வழிந்து,

 காய்ந்துபோன தடத்தில்,

முத்தங்கள் வழிநெடுக..

கடவுள்களை உருவாக்கும் தேசம்

தமிழ்நாட்டில் நடந்துவரும் சில விஷயங்கள் உச்சகட்ட கோபத்தை உண்டு செய்கின்றன.

அதில் ஒன்று,

எழுத்தாளர் ஜெயமோகனுக்கு நடந்தது.தன்னுடைய  Blogல் (www.jeyamohan.in)  MGR,Sivaji இருவரைபற்றியும் சில விஷயங்களை எழுதியிருந்தார்.முழுக்க முழுக்க அங்கதம்(sattire) சார்ந்த ஒன்று.ஆனால் அடுத்த வாரமே வெகு ஜன பத்திரிக்கையான ஆனந்த விகடன் அதை Copy paste செய்தது..எந்த வகையான பத்திரிக்கை நாகரீகம் என்று தெரியவில்லை.

தமிழ்நாடே கொந்தளிக்கும் என்று சில பேர் பேசிக்கொண்டார்கள்.சிறு சலனம் கூட இல்லை பொது மக்கள் மத்தியில் ஆனால் சமூகப்பாதுகவலர்கள்,கலாச்சார பாதுகாவலர்களான சினிமா நடிகர்கள் வெகுண்டெழுந்து,ஆனந்த விகடனை மன்னிப்பு கேட்க வைத்தும்,ஜெயமோகனுக்கு தமிழ் சினிமாவில் வேலை செய்ய தடைசெய்தும்,தங்கள் சக்தியை மீண்டும் ஒருமுறை காட்டி விட்டனர்.மகிழ்ச்சி.ஏற்கனவே கோடம்பாக்கம் முதலமைச்சர்களை உற்பத்தி செய்யும் இடமாகிவிட்ட நிலையில்,அதிகார வர்க்கமாகவும் தற்பொழுது நிலைநாட்டிக்கொண்டது.

மரபுகளை உடைக்கக்கூடிய,பொதுப்புத்தியை அழிக்கக்கூடிய சக்தி இலக்கியம் போல் சினிமாவுக்கும் உண்டு என்ற ஆதார விஷயம் கூட தெரியாமல் புனிதங்களை கட்டமைத்துக்கொண்டிருக்கிறார்கள்.கதாநாயகியை மல்லாக்கப்போட்டு, மேல் ஏறிப்படுத்து,கால் முதல் கழுத்து வரை நாய் போல் முகர்ந்து பார்த்து(romance???),தொப்புளில் பம்பரம் மற்றும் ஆம்லெட் போட்டு தொழில் நடத்தும் சில சினிமா நடிகர்கள் .. கலாச்சார சக்தியாக உருவெடுப்பது இந்த சமூகத்தின் சாபக்கேடுகளில் ஒன்று.

சம கால சினிமா நடிகர்கள் “Demi God” ஆக கொண்டாடப்படும் இந்த philistine சமூகத்தில் மறைந்த சினிமா நடிகர்கள் புனிதர்களாகவும்,கடவுள்களாகவும்,விவாதிக்க கூடாதவர்களாகவும் ஆக்கபட்டத்தற்கு யார் காரணம் ?

நாம்தான்.

ஜெயமோகன் சொல்வதுபோல்

சிவாஜியின் சண்டை காட்சிகள் வைக்கோல் புடுங்குவது போல் தான் இருக்கும்.

MGR பாடல் காட்சிகளில் கதாநாயகிகள் மேல் ஏறிப்படுத்து நாஸ்தி செய்வார்.. உண்மைதானே!.அவர்களின் படங்களே சாட்சி.

ஒரு சினிமா நடிகனை சமூகத்தில் எந்த இடத்தில் வைக்க வேண்டும் என்று நம் சமூகத்திற்கு தெரியவில்லை.ஒரு சமூகத்தில் தனக்கான இடம் எதுவென்றும் சினிமா நடிகனுக்கு தெரியவைல்லை என்ற கூற்று உண்மைதான்.Source (Theodar Baskaran’s “Chithiram Pesuthadi”).

சினிமாவில் பல படங்களில் எழுத்தாளர்கள் பைத்தியக்கரர்களாக காட்டபட,கடவுள்கள்,கலாச்சாரம்,மதம்,ஒரு மனிதனின் ஊனம்,பெண்கள் எல்லாமே கோடம்ப்பக்கத்து முட்டள்களுக்கு கிள்ளுக்கீரை.

கடவுளையே விமர்சித்து படமெடுக்கும்(Davinci Code) Hollywood எங்கே,நடிப்பை தவிர மற்ற எல்லவற்றிலும் ஈடுபட்ட(Politics,Goupism,Exploitation,Castism,Image buildup),ஈடுபடுகிற
தமிழ் சினிமா நடிகர்களை புனிதமாக்கி,விமர்சனத்திற்கும் ஏன் அங்கதத்திற்கும் அப்பால் வைக்கிற தமிழ் சினிமா உலகம் எங்கே?

 

ஆனால் ஒன்று,நம் சமூகத்தில் கடவுள்களின் எண்ணிக்கை பெருத்துக்கொண்டே போகிறது,
வெட்கப்படுவதா? இல்லை வழிபடுவதா? ஒன்றுமே புரியவில்லை..


வாழ்க தமிழ் சமூகம்

நீல பத்மநாபன்

மனிதவாழ்க்கை என்பது வாழ்வதற்கான போராட்டம் மட்டுமே. ஆகவே மனிதர்களை அப்படி உன்னத மதிப்பீடுகளை மட்டும் வைத்து எடைபோடக் கூடாது. — நீல பத்மநாபன் [சாகித்ய அக்காதமி விருது கிடைத்தமைக்காக பாராட்டுவிழா ஏற்புரையில்.]