General

General

என் முதல் காதலியின் முதல் காதல் கடிதம்.

St.Petersberg “வெள்ளை இரவில்” புணரலாம்.

கூட்டதில், நடுவே நான் நடந்து செல்ல

அதிர்ச்சி முத்தம் கொடுத்து மறைந்து போ.

ஆள் அரவமற்ற பள்ளத்தாக்கில்

பெருங்குரலெடுத்து உன் காதலை சொல்..

என் எல்லா ரகசியங்களும் உன்னிடம்

ஒரு நாள் சொல்லப்படும்.அதுவரை பொறு.

என்னை என்ன கஷ்டப்பட்டாவது

வெட்கப்பட வை.

கிளி வளர்ப்போம்.நம் இருவர் பெயரையும்

அது வாய் வலிக்க கத்திக்கொண்டிருக்கட்டும்..

மழை வரும் போது எங்கிருந்தாலும்

நீயும் வந்து விடு.

மழையுடன் போட்டி போட்டு என்னை

நனைத்து சிலிர்க்க வை.

உன் வாசனையை என் உடல் மீது விட்டுசெல்.

உன் வாசனையின்,தொட்ட தடம் மறையும் நாளில்

நான் மரித்துபோயிருப்பேன்.

இப்படிக்கு…