சொல்லத் துடிக்குது மனசு – 1
சொல்லத் துடிக்குது மனசு
——————————-
சொல்வதற்கு நிறைய இருக்கிறது.பார்ப்பது,படிப்பது,கேட்பது என பல.
அனால் எழுதுவது ஒரு தவத்தை போல்.நேரம்,மனநிலை எல்லாம் கூடி வர வேண்டும்.அதிகமாக எழுதாமல்
கொஞ்சமாக அதே நேரத்தில் சொல்லவந்ததை சொல்லும் கலை இருப்பவர்கள் வெகு அரிது.எதோ ஒரு ஆர்வத்தில் இந்த
முயற்சியை எடுத்திருக்கிறேன்.பார்ப்போம்..
——————————-
LOBBY : லாபி விஷயத்தில் தமிழர்கள் மிக மோசமாக இருக்கிறோம்.கன்னட இலககியம் 8 ஞானபீட விருதுகளை வாங்கியிருக்கிறது.மலையாளம் 6 ஹிந்தி 6 .
ரயில்வே திட்டங்கள்,சினிமா தேசிய விருதுகள்,மதிய அரசின் புதிய திட்டங்களில் எல்லாம் லாபி புகுந்து விளையாடுவது நிதர்சனமான உண்மை.இலக்கியத்தில் எடுத்துக்கொண்டால் தமிழ் நவீன இலககியம் வேறு எந்த இந்திய மொழிகளை விடவும் முன்னோக்கி இருக்கிறது.சாகித்ய அகாடமி,ஞான பீட விருது எல்லாம் நம் கைக்கு எட்டுவதே இல்லை.இதனால் தமிழ் இலக்கிய செயல்பாடுகளை பற்றி வெளியில் அவ்வளவாக தெரியவில்லை.
கொஞ்ச நாளாக தமிழ் சினிமா இந்த விஷயத்தில் இந்திய அளவில் தன் அவப்பெயரை மாற்றிக்கொண்டிருக்கிறது.திட்டங்கள் விஷயத்தில் மக்கள் தங்கள் பிரதிநிதிகளை கேள்வி கேட்பதும்.கலை இலக்கிய விஷயத்தில் நம் பெருமையை தயங்காமல் மற்றவர்களுக்கு சொல்வதும் தான் இந்த பிரச்சனைக்கு ஒரே வழி.
இந்த வருட ஞான பீட விருதை பெற்ற கன்னட நாடக எழுத்தாளர் சந்திர சேகர கம்பரை விடவும் மிகச்சிறந்த ஆளுமைகள் தமிழில் சமகாலத்தில் இயங்கிக்கொண்டிருக்கிறார்கள்.
——————————-
ஒரு கவிதை
எதிராளியை வீழ்த்திவிடும்
ஒரு பெண்புலியின் தீர்க்கமான பார்வை
மறுபேச்சு பேச முடியாத
அவளின் ஒற்றை வார்த்தை
நெருப்பைப்போல் சட்டென பற்றும் கோபம்
இதெல்லாம் போக
ஒரு குழந்தை அவள் கையில் கொடுக்கப்பட்டதும்
அதனுடனான உரையாடலுக்கு
வெகு சீக்கிரத்தில் தயாராகி விடுகிறாள்
என் அம்மா.
– பிரபு ராஜ்