மழை உங்களிடம் இதுவரை ஏதேனும் புகார்
சொல்லியிருக்கிறதா
ஒரு பச்சை புழுவை காணோம் வெகு நாட்களாக
ஒரு கூழாங்கல்லை ஒரு சிறுமி பொறுக்கிப் போய்விட்டதாக
ஒரு வானவில் மீன்கொத்திச் சிறகாக உதிர்ந்து விட்டதாக
நீங்கள் உங்கள் வீட்டுச் சிறுவனை
நனையக்கூடாது என்று தடுத்துவிட்டதாக
வெளியே வந்து எதையும் பாராமல்
முட்டாள் பெட்டி முன் நீங்கள் சாய்ந்து கிடப்பதாக
இல்லை அல்லவா

அப்புறம் நீங்கள் ஏன் மழை குறித்து
இவ்வளவு புகார்களை எல்லோரிடமும்
வீட்டுக்குள் தேனீர் அருந்திக்கொண்டே
சொல்லிக்கொண்டு இருக்கிறீர்கள்

- Vannadhasan @ Kalyanji

வண்ணதாசன் கேணி சந்திப்பு  பற்றி குறுஞ்செய்தி வந்ததும், மனம் படபடத்தது.அவரை இந்தமுறை எப்படியும் சந்தித்து விட வேண்டும் என ஒரு பேராவல். சந்தித்து விட்டேன்.

எதிர்பார்க்கவே இல்லை
அந்தக்கவிஞரின் புதியவீட்டுச்
சுற்றுச் சுவர்களில்
எந்தப் பறவைகளும்
பூனைக்குட்டிகளும்
அமர முடியாதபடி
கண்ணாடிச்சில்லுகள்
பதிக்கப்பட்டிருக்கும் என

–வண்ணதாசன்